பேருந்து காவலர்களை மீண்டும் நியமிக்க ஆளுநருக்கு டெல்லி முதல்வர் ஆதிஷி கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்​புக்காக கடந்த 2017-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் (பேருந்து மார்ஷல்ஸ்) நியமிக்​கப்​பட்​டனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் வேலையை இழந்தனர். இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அப்போதைய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்​தார்.

இந்நிலை​யில், ஓராண்​டுக்குப் பிறகு 10 ஆயிரம் பேருந்து காவலர்களை மீண்டும் நியமிக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது துணைநிலை ஆளுநரின் ஒப்பு​தலுக்கு அனுப்பி வைக்கப்​பட்டது. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்​சேனா​வுக்கு முதல்வர் ஆதிஷி நேற்று எழுதி உள்ள கடிதத்​தில், “பேருந்து காவலர்களை மீண்டும் நியமிப்பது தொடர்பான கோப்பு தங்களுக்கு அனுப்​பப்​பட்டு 2 வாரங்​களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒப்புதல் கிடைக்க​வில்லை. இந்த திட்டத்துக்கு உடனடி யாக ஒப்புதல் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்