புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் சம்பலில் இருந்த கல்வி அவதாரக் கோயிலை இடித்துவிட்டு ஜாமா மசூதி கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மசூதியில் நடத்தப்பட்ட களஆய்வின்போது கலவரம் மூண்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து சம்பலின் சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு கழகம்(ஏஎஸ்ஐ) தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது: கடந்த 1920-ம் ஆண்டு சம்பலின் மசூதி, ஏஎஸ்ஐயின் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் அம்மசூதியை கண்காணிக்கும் பொறுப்பு ஏஎஸ்ஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1998-ல் மட்டும் ஏஎஸ்ஐயால் மசூதியினுள் செல்ல முடிந்தது. அதன் பிறகு கடந்த ஜுலை மாதம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உதவியால் உள்ளே சென்று பார்வையிட முடிந்தது. அப்போது சட்டவிரோதமாக பல கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இது வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1958-ஐ மீறும் செயல். மசூதியின் அடித்தளத்தையும் பல அறைகளாகப் பிரித்து கடைகளாக்கி மசூதி நிர்வாகத்தால் வாடகை வசூலிக்கப்படுகிறது.
2018 -ல் போலீஸில் புகார் செய்தும் பலனில்லை. தடுப்புகளை அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 16, 2019-ல் ஆக்ரா ஏஎஸ்ஐ கண்காணிப்பாளர் உத்தரவிட்டும் பலனில்லை. மசூதியின் தரைகள் புதுப்பிக்கப்பட்டு, கட்டிடத்தின் மீது பல முறை வர்ணங்களும் பூசப்பட்டுள்ளன. இதனால், மசூதியின் உண்மையான வரலாற்று வடிவத் தன்மை மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உ.பி. எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான மாதாபிரசாத் பாண்டே தலைமையிலான 15 பேர் அடங்கிய குழுவினர், சம்பல் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்க நேற்று சென்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago