தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் நீக்கம்

By செய்திப்பிரிவு

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசு ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் அப்துல் ரஹிம் நைக்கா, ஜாகிர் அப்பாஸ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் 2 பேரும் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டம் 311(2) (சி) பிரிவின்படி அவர்கள் நீக்கப்பட்டனர் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் நடந்துகொண்டதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் அரசு எடுத்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட நைக்கா, சுகாதாரம், மருத்துவக் கல்வித்துறையிலும், அப்பாஸ், கிஸ்த்வார் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்