மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் முதல் புல்லட் ரயில்: உள்நாட்டில் தயாராகிறது

By செய்திப்பிரிவு

இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: புல்லட் ரயில் தயாரிப்பை இந்திய ரயில்வே வேகப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் புல்லட் ரயில்கள் மற்றும் அதிவேக வழித்தடத்துக்கான சிக்னல் கருவிகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், புல்லட் ரயில் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கான நில கொள்முதல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. 320 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயிலுக்கான கட்டமைப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளன.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் அம்சங்கள் மிகவும் மதிப்பு மிக்கவையாக இருக்கும். பல வழித்தடங்களில் இத்திட்டத்தை மேற்கொள்ள தற்போது இந்தியாவால் முடியும். எதிர்காலத்தில் நாம் சொந்த ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மணிக்கு 280 கி.மீ வேகம் வரை செல்லும் புல்லட் ரயில்களை தயாரிக்கும் அளவுக்கு திறன் மிக்கதாக மாற இந்தியா விரும்புகிறது.

ரயில்பெட்டிகளின் சஸ்பென்ஷன் தயாரிப்பில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். புல்லட் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிப்புக்கு குறிப்பிடத்தக்க மேம்பாடு தேவை. இந்த ரயில்கள் தயாராவதற்கு சுமார் 3 ஆண்டுகள் ஆகும். புல்லட் ரயில் தயாரிப்பில் ஜப்பான் ஒத்துழைப்பை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. மும்பை -அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் நவீன ரயில்களை விநியோகிப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழித்தடத்தில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் பெட்டிகளை தயாரிக்க ஐசிஎப் தொழிற்சாலையை ரயில்வே வாரியம் உருவாக்கியுளளது. புல்லட் ரயில்களை ரூ.866.87 கோடிக்கு தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனம் ஈடுபடுத்தப்படுகிறது. ஒரு பெட்டி தயாரிக்க ரூ.27.86 கோடி செலவாகும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசைன், உற்பத்தி செலவு அகியவை இதில் அடங்கும். இவ்வாறு இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்