புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அண்மையில் பயணம் மேற்கொண்ட நாடுகளின் வீடியோ தொகுப்பு பிரதமரின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், ஆஸ்திரியாவில் வந்தே மாதரம் பாடல், போலந்து, ரஷ்யா, பூடானில் கர்பா நடனம், பூடானில் இந்திய கலாச்சார நடனம், சிங்கப்பூரில் பரத நாட்டியம், லாவோஸில் ராமாயணம் அரங்கேற்றம், பிரேசிலில் சம்ஸ்கிருத வேத மந்திரங்கள், ராமாயணம் அரங்கேற்றம் உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோக்களுடன் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது. நான் செல்லும் இடமெல்லாமல் நமது நாட்டின் வரலாறு, கலாச்சாரம் செழித்தோங்கி இருப்பதை பார்க்க பூரிப்பாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
» மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிப்பு
» சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago