பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகையில், “பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்களுக்கு அடிமையாக இருக்கவில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்தின் எல்லையை தீர்மானிக்கும் விஷயமாக இருக்கிறது. பெங்களூருவில் சில இடங்களில் பிற மொழியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொண்டு, கன்னடத்திலே பேச வேண்டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் கூறுகையில், “நீதிபதி எம்.ஐ.அருணின் கருத்தால் தமிழர்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் தனது கருத்தை திரும்ப பெறுவதுடன், அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். நீதிபதிகள் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் வீரியமாக போராடினார்கள்” என்றார். பெங்களூருவை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஞானம
ணியின் மகன் பாவலர் மகிமை தாஸ் கூறும்போது: பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
என் தந்தை ஞானமணி கோலார் தங்க வயலில் இருந்து வந்து இங்கு நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். கன்டோன்மென்ட் ஜில்லா காங்கிரஸில் முக்கிய பிரமுகர்களாக இருந்த மாசிலாமணி, முனிரத்னம், ஜெயரத்னம், கிருஷ்ணன், அன்னியம்மாள் போன்றோர் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர்களாக இருந்தனர். இதுபோன்ற வரலாற்று உண்மையை அறியாமல், நீதிபதி எம்.ஐ.அருண் பேசுவது ஏற்புடையது அல்ல’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago