டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் காயம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 11.48 மணிக்கு நடந்துள்ளது. இதனை டெல்லி தீயணைப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததும் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். வெடிகுண்டு கண்டறியும் குழு, போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாய் துணையுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை போலவே இதுவும் நடத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளது. இப்போது அது சார்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்