உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ரயில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யா​வில் ரயில் தேவை​களைப் பூர்த்தி செய்​வதற்காக இந்தியா​வில் அதிக முதலீடுகளை செய்ய அந்த நாடு ஆர்வம் காட்டி வருகிறது. அத்துடன் இந்தியா​விலேயே ரஷ்யா​வுக்கு தேவையான ரயில் பெட்​டிகளை தயாரிப்​ப​தற்கான உற்பத்தி மையத்தை தொடங்​க​வும் ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுதொடர்பாக கடந்த வாரம் ரஷ்யா​வின் மிகப்​பெரிய ரயில் நிறு​வனமான டிஎம்​எச், இந்திய ரயில்வே அதிகாரி​களுடன் பேச்சு​வார்த்தை நடத்தி உள்ளது. ரஷ்யா​வின் டிஎம்எச் நிறு​வனம் ஏற்கெனவே இந்தியா​வில் படுக்கை வசதி​யுடன் கொண்ட வந்தே பாரத் ரயில் உற்பத்​தி​யில் பங்கேற்றுள்​ளது. இதுகுறித்து ரயில்வே துறை உயரதி​காரி ஒருவர் நேற்று கூறுகை​யில், ‘‘ரஷ்​யா​வில் ரயில்​களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. அதனால், இந்தியா​வில் முதலீடு செய்​ய​வும், உதிரி பாகங்களை கொள்​முதல் செய்​ய​வும், ரயில் உற்பத்தி மையத்தை அமைக்​க​வும் அந்த நாடு மிகவும் ஆர்வமாக உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் இந்திய செய்தி​யாளர்களை சந்தித்த டிஎம்எச் சிஇஓ கிரில் லிபா கூறிய​தாவது: மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா​வில் வட்டி விகிதம் வித்​தி​யாசமாக உள்ளது. எனவே, இந்தியா​வில் அதிக முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம். ஏற்கெனவே ரஷ்யா​வுக்கு ரயில் தொடர்பான பல்வேறு பாகங்களை சப்ளை செய்​வதற்காக பல இந்திய நிறு​வனங்​களுடன் ஒப்பந்தம் மேற்​கொண்​டுள்​ளோம். அந்த நிறு​வனங்​களுடன் எங்களுக்கு சிறந்த உறவு உள்ளது. எனவே, அந்த நிறு​வனங்​களிடம் இருந்து இன்னும் கூடு​தலாக பாகங்களை இறக்​குமதி செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம். இவ்வாறு கிரில் லிபா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்