இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும்: வங்கதேச அரசுக்கு பவன் கல்யாண் கண்டனம்

By என். மகேஷ்குமார்

அமராவதி: வங்​கதேசத்​தில் இந்துக்​களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறு​வதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்​கப்​பட்டு வருகின்றன. அடக்​கு​முறைகள் அதிகரித்து வரும் நிலை​யில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீ​ஸார் டாக்கா விமான நிலை​யத்​தில் கைது செய்​துள்ளனர்.

இந்திய அரசு இந்த விவகாரத்​தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலை​யில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்​கல்​யாண் சமூக வலை​தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்துக்களை குறி வைத்து நடத்​தப்​படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கூட்டாக சேர்ந்து கண்டிக்க வேண்​டும். இதற்காக நாம் போராட​வும் தயாராக இருக்க வேண்​டும். வங்கதேசத்​தில் இந்துக்​களுக்கு எதிராக நடக்​கும் இது போன்ற மதம் சம்பந்​தப்​பட்ட போராட்​டங்களை அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். வங்கதேசம் உருவாக இந்திய ராணுவத்​தினர் பலர் உயிர் தியாகங்களை செய்​துள்ளனர் என்பதை அந்நாட்டு தற்காலிக அதிபர் கவனத்​தில் கொள்ள வேண்​டும். இவ்வாறு பவன் கல்யாண் தெரி​வித்​துள்ளார்.

இதனிடையே, டெல்​லி​யில் பவன் கல்யாண் சுற்றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் நிலை​யில், பிரதமர் மோடியை நேற்று அவர் மரியாதை நிமித்​தமாக சந்தித்​தார். அதன் பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் பேசுகை​யில், ‘‘கடந்த ஜெகன்​மோகன் ஆட்சி​யில் பல முறை​கேடு​கள், ஊழல்கள் தலைவிரித்​தாடின. அதானி குழு​மத்​திடம் ஆந்திர முன்​னாள் முதல்வர் ஜெகன்​மோகன் ரெட்டி மற்றும் அவரது அமைச்​சர்கள் சிலர் ரூ.1,750 கோடி லஞ்சம் பெற்​றதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்​டி​யுள்​ளது. அமைச்​சரவை கூட்​டத்​தில் கலந்​தாலோ​சித்த பின்னர் கண்டிப்பாக இந்த விவகாரம் தொடர்​பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆந்திரா​வில் வெட்டி கடத்​தப்​பட்டு, அண்டை மாநிலங்​களில் பிடிபட்ட செம்​மரங்களை கையகப்​படுத்துவது தொடர்​பாக​வும் பேச்​சு வார்​த்​தை நடத்​த வேண்​டியஅவசியம்​ உள்​ளது’’ என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்