பெங்களூரு காவல் நிலையத்தில் வீட்டு பணியாளர் கொல்லப்பட்ட வழக்கு: 4 காவலர்களை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்​களூரு​வில் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர சிங் (42) என்பவர் அவர் பணியாற்றிய வீட்​டில் ரூ.3.5 லட்சம் திருடியதாக ஜீவன் பீமாநகர் போலீ​ஸாரால் கைது செய்​யப்​ப‌ட்​டார். அவரை போலீ​ஸார் காவல் நிலை​யத்​தில் வைத்து கடுமையாக தாக்​கிய​தால் அவர் அங்கேயே உயிரிழந்​தார்.

இதுதொடர்பான வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்​றது. இந்த வழக்​கில் நீதி​மன்றம் நேற்று பிறப்​பித்த உத்தர​வில் கூறியிருப்பதாவது: மகேந்திர சிங் வழக்​கில் ஜீவன் பீமா நகர் காவல் நிலை​யத்​தின் தலைமை காவலர் அஜாஸ் கான், ​காவலர்கள் கேசவ்மூர்த்தி, மோகன் ராம் மற்றும் சிதப்பா பொம்​மனஹள்ளி ஆகியோர் மீதான கொலை குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​டு உள்​ளது.

சிசிடிவி கேமரா பதிவில் கொலையான மகேந்திர சிங், சம்பவத்​தன்று காலை​யில் ஆரோக்​கியமான முறை​யில் உள்ளே நடந்து செல்​கிறார். ஆனால் சரிந்த நிலை​யில் போலீ​ஸார் அவரை மருத்​துவ​மனைக்கு தூக்கிச் செல்​கிறனர். அவரது பிரேதப் பரிசோதனை​அறிக்கையில் கூர்​மையான ஆயுதங்​கள், தடிமனான கட்டைகளால் தாக்​கிய​தால் அவர் இறந்ததாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. அவரை தாக்கி கொன்ற 4 போலீ​ஸாரும் குற்​றவாளிகள் என நீதி​மன்றம் அறிவிக்​கிறது.

அவர்களை இந்திய தண்டனைச் சட்டத்​தின் 304-ம் பிரிவு ம‌ற்றும் 330-ம் பிரிவின் கீழ் தண்டனைக்​குரிய குற்​றவாளி​களாக கருதுகிறது. எனவே அவர்​களுக்கு அளிக்​கப்​பட்ட ஜாமீன் ரத்து செய்​யப்​பட்டு, தண்​டனைக்காக 28-ம் தேதி ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்