ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா என்ற இடத்தில் வைஷ்ணவ தேவி மலைக் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 80 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். வயதான பக்தர்கள் கோயிலுக்கு எளிதில் செல்வதற்காக இங்கு ரோப் கார் திட்டம் ரூ.250 கோடி செலவில் அமைக்க வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் முடிவு செய்தது. மலைப் பாதையில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், கோயிலுக்கு 6 நிமிடத்தில் எளிதாக செல்ல முடியும்.
இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என வைஷ்ணவ தேவி மலைப் பாதையில் உள்ள வியாபாரிகள், சுமை தூக்குவோர், குதிரைகளில் பக்தர்களை ஏற்றிச் செல்வோர் கூறுகின்றனர். ரோப் கார் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய ரிசர்வ் போலீஸார் மற்றும் காஷ்மீர் போலீஸாருடன், போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனம் மற்றும் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இங்கு சட்டம், ஒழுங்கு சவாலாக உள்ளதாக மாவட்ட எஸ்.பி பரம்வீர் சிங் தெரிவித்தார். இங்கு கடந்த 4 நாட்களாக போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago