பெண் தொழிலதிபரை ஆடையை களைந்து அவமதித்ததால் தற்கொலை: பெங்களூரு பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்​நாடகா போவி மேம்​பாட்டு ஆணையத்​தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்​பினர்​களுக்கு வேலை​வாய்ப்புத் திட்​டத்​தின் கீழ் கடனுக்காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் ஊழல் நடந்​ததாக புகார் எழுந்​தது. இதுதொடர்பாக சிக்​கபள்​ளாப்​பூர், தொட்​டபள்​ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்​குகள் பதிவான நிலை​யில், அந்த வழக்​குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன.

இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்​களூரு​வில் உள்ள பத்ம​நாபா நகரை சேர்ந்த‌ பெண் தொழில​திபர் ஜீவா (33) என்பவரிடம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இந்நிலை​யில் கடந்த சனிக்​கிழமை இரவு தனது வீட்​டில் ஜீவா தற்கொலை செய்​து​கொண்​டார். அவர் இறப்​ப​தற்கு முன்பு எழுதி​ய​தாகக் கூறப்​படும் 11 பக்க தற்கொலை கடிதத்​தில், ‘‘கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை போலீஸ் விசா​ரணைக்கு ஆஜரானேன். அப்போது சிறப்பு புலனாய்வுபிரி​வின் துணை காவல் கண்காணிப்​பாளர் கனகலட்​சுமி என்னை மனரீ​தி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் துன்​புறுத்​தினார்.

விசா​ரணை​யின் போது எனது ஆடைகளை களைந்து, சயனைடு கொண்டு வந்திருக்​கிறேனா? என்று கேட்​டார். மேலும், இவ்வழக்​கில் இருந்து என்னை விடுவிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்​டார். அவர் அளித்த ஆவணங்​களில் கையெழுத்திட மறுத்​த​தால் கடுமையாக மிரட்​டி​னார்” என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உயிரிழந்த ஜீவா​வின் சகோதரி சங்கீதா பனசங்கரி போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். உயிரிழந்த ஜீவா​வின் உடலை கைப்​பற்றிய போலீ​ஸார் பிரேத பரிசோதனைக்காக விக்​டோரியா மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த புகார் குறித்து விசா​ரித்த போலீ​ஸார், ‘‘பெண் தொழில​திபரை மிரட்டிய சிறப்பு புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்​பாளர் கனகலட்​சுமி மீது ஊழல் தடுப்புச் சட்​டம் பிரிவு 7, பார​திய நியாய சன்​ஹிதா பிரிவு 108 ஆகிய​வற்றின் கீழ் வழக்​குப் ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது" என்று தெரி​வித்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்