அதானி வழங்கிய ரூ.100 கோடியை தெலங்கானா அரசு நிராகரித்துவிட்டது: முதல்வர் ரேவந்த் ரெட்டி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்கு அதானி பவுண்டேஷன் வழங்க ஒப்புக்கொண்ட ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி, "யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்காக பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. அந்த வகையில், அதானி குழுமமும் ரூ.100 கோடி கொடுத்தது. ஆனால், அந்த நன்கொடையை ஏற்க வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதனை நாங்கள் அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம்" என தெரிவித்தார்.

மேலும், கடிதத்தின் நகலையும் செய்தியாளர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார். தெலங்கானா மாநில சிறப்பு தலைமை செயலர் ஜெயேஷ் ரஞ்சன், அதானி பவுண்டேஷனின் தலைவர் பிரிதி அதானிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "யங் இண்டியா திறன் பல்கலைக்கழகத்துக்கு உங்கள் பவுண்டேஷன் மூலம் ரூ.100 கோடி வழங்க நீங்கள் முன்வந்ததற்காக நன்றி. வருமான வரி விலக்கு பெறும் வரை நன்கொடைதாரர்களிடம் இருந்து நன்கொடை பெற வேண்டாம் என்பதற்காக யாரிடம் இருந்தும் இதுவரை நன்கொடை பெறவில்லை. தற்போது வருமான வரி விலக்கு உத்தரவு கிடைத்துள்ளது. எனினும், தற்போதைய சூழல் மற்றும் அதிகரித்து வரும் சர்ச்சை காரணமாக அத்தொகையை அனுப்ப வேண்டாம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்திடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிறுவனம் நிதி திரட்டி உள்ளதாகவும் அமரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தெலங்கானா அரசு அதானி குழுமம் வழங்க முன்வந்த நன்கொடையை ஏற்க மறுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்