புதுடெல்லி: அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது என்றும் அது எப்போதும் சமூக ஆவணமாகவே தொடர வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை அளித்துள்ளோம்.
அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து சாதியினருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எப்படி வாக்குரிமையைப் பயன்படுத்தினோம் என்பது குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். எனவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு, அனைவரையும் ஒன்றிணைத்து ஒன்றாகச் செயல்படுவதற்கான வலிமையை நமக்கு அளிக்கிறது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
எந்தவொரு கட்சியும், எந்த ஒரு சித்தாந்தமும், எந்த ஒரு அரசாங்கமும் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வை அல்லது கட்டமைப்பை குறைக்க முடியாது. அரசியலமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவை, மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகவே.
» எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
» ‘வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி’ - பிரதமர் மோடி
அரசியலமைப்புச் சபையில் பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஆனால் அரசியலமைப்புச் சபை அர்த்தமுள்ள மற்றும் நேர்மறையான விவாதங்களை நடத்தியது. நமது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்ற அவைகளில் நல்ல விவாதங்களை நடத்த முடியும். வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாட்டுக்காக உழைக்க நாம் ஒன்றுபட வேண்டும். சித்தாந்தங்களும், அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும் வேறுபடலாம். ஆனால் நாடு எப்போதும் அனைவருக்கும் முதன்மையானது.
நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உட்பட அனைவராலும் அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படுகிறது. அரசியலமைப்பை நிறைவேற்றுபவர்கள் திறமையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்களாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டமும் திறன்மிக்கதாக மாறும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார். நாம் எப்போதும் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருந்து வருகிறோம். அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி வருகிறோம். அது நாடாளுமன்றமாகவோ அல்லது சட்டமன்றமாகவோ இருந்தாலும், அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் அரசியலமைப்பின் படி செயல்பட்டு வருகின்றன, தொடர்ந்து செயல்படும்.” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago