உ.பி.யில் கலவரம் எதிரொலி: சம்பல் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை, இணைய சேவை துண்டிப்பு

By செய்திப்பிரிவு

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீ​ஸார் காயமடைந்​த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்க, பதுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதிக்குள் வரும் டிச.1 ஆம் தேதிவரை வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதித்துள்ளது.

நடந்தது என்ன? உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதைத்​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள் மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இருப்​பினும், நீதி​மன்ற உத்தர​வின் அடிப்​படை​யில் மசூதியை ஆய்வு செய்​வ​தில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர். இதையடுத்து, அந்த பகுதி​யில், போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் வெடித்​தது.

இந்த வன்முறை சம்பவத்​தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 5 ஆக அதிகரித்துள்ளது. 30-க்​கும்மேற்​பட்ட போலீஸார் காயமடைந்​தனர். உயிரிழந்​தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. ஜமா மசூதி அமைந்​துள்ள பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஆஞ்​சநேய கு​மார் சிங் தெரி​வித்​தார். சர்ச்​சைக்​குரிய ஜமா மசூதி ஆய்வு ​விவ​காரம் தற்​போது சம்​பல் பகு​தி​யில் ப​தற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

2 பெண்கள் உள்பட 20 பேர் கைது - இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தப்படும். கலவரத்தில் தொடர்புடையோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்