முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

By செய்திப்பிரிவு

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதைத்​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள் மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இருப்​பினும், நீதி​மன்ற உத்தர​வின் அடிப்​படை​யில் மசூதியை ஆய்வு செய்​வ​தில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர். இதையடுத்து, அந்த பகுதி​யில், போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் வெடித்​தது.

இதுகுறித்து மொர​தாபாத் மண்டல ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் கூறிய​தாவது: ஒரு வழக்​கறிஞர் தலைமை​யில் தொல்​லியல் ஆய்வுக் குழு பணியை தொடங்​கியபோது, மசூதிக்கு அருகில் கூடிய கூட்டம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்தது. ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கூடிய நிலை​யில், மசூதிக்​குள் போலீ​ஸார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்​றது. அப்போது, கூட்​டத்​தில் இருந்த சிலர் போலீ​ஸாரை நோக்கி கற்களை வீசி தாக்​குதல் நடத்த தொடங்​கினர். பத்துக்​கும் மேற்​பட்ட வாகனங்​களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறை​யில் ஈடுபட்​டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்​படுத்த போலீ​ஸார் கண்ணீர் புகை குண்​டுகளை வீசி கும்பலை கலைத்​தனர்.

இந்த வன்முறை சம்பவத்​தில் 3 பேர் உயிரிழந்​தனர். 30-க்​கும்மேற்​பட்ட போலீஸார் காயமடைந்​தனர். உயிரிழந்​தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. ஜமா மசூதி அமைந்​துள்ள பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஆஞ்​சநேய கு​மார் சிங் தெரி​வித்​தார். சர்ச்​சைக்​குரிய ஜமா மசூதி ஆய்வு ​விவ​காரம் தற்​போது சம்​பல் பகு​தி​யில் ப​தற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்