ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதையடுத்து ராஞ்சியில் 28-ம் தேதி நடைபெறும் விழாவில் மீண்டும் முதல்வர் பதவியேற்கிறார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் இண்டியா கூட்டணியாக போட்டியிட்டன. பாஜக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16 தொகுதிகள் உட்பட மொத்தம் 56 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
பாஜக 21 மற்றும் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வாரை, ஜேஎம்எம் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். மேலும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை பெற்ற ஜேஎம்எம் கட்சிக்கு ஆளுநர் சந்தோஷ் அழைப்பு விடுத்தார். முன்னதாக நேற்று காலை ஹேமந்த் சோரன் தலைமையில் இண்டியா கூட் டணி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
» உலகளவில் கூட்டுறவு இயக்கத்தின் தலைமையிடமாக உருவெடுக்கும் இந்தியா
» அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி டாக்டர் பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்பு
இதையடுத்து ராஞ்சியில் 28-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் நேற்று கூறுகையில், ‘‘ஜார்க்கண்டில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார்’’ என்று உறுதிப்படுத்தினார். எனினும், இந்த முறை துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கேட்கும் என்று கூறப்படுகிறது.
பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கம்லியால் ஹெம்பிராமை விட ஹேமந்த் சோரன் 39,791 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஹேமந்த் மனைவி கல்பனா சோரன், கண்டே தொகுதியில் 17,142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23.44 சதவீத வாக்குகளே பெற்றது. ஆனால், பாஜக 68 இடங்களில் போட்டியிட்டு 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த மாநிலத்தில் பாஜக 33.18 சதவீத வாக்குகள் பெற்றது. ஆனால், பாஜக.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago