உலகளவில் கூட்டுறவு இயக்கத்தின் தலைமையிடமாக உருவெடுக்கும் இந்தியா

By Guest Author

கூட்டுறவுத் துறை பொருளாதார ரீதியாக தனிநபர்களை வளப்​படுத்துவது மட்டுமல்​லாமல், பொருளா​தா​ரத்​தின் பிரதான நீரோட்​டத்​தில் அவர்களை ஒருங்​கிணைப்​ப​தற்​கும் முக்​கியப் பங்காற்றுகிறது. மூலதனம் இல்லாத அல்லது சிறியள​வில் சேமிப்பை மட்டுமே கொண்​டுள்ள மக்களை மேம்​படுத்து​வதற்கான சிறந்த கருவியாக கூட்டுறவு இயக்கம் உள்ளது.

2021-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி​ தலைமை​யின் கீழ், தேசிய அளவில் கூட்டுறவுக்கென பிரத்யேக அமைச்​சகம் உருவாக்​கப்​பட்​டது. மூன்று ஆண்டு​களில் இந்தத் துறையை வலுப்​படுத்த எடுக்​கப்​பட்ட நடவடிக்கைகள், கூட்டுறவுத் துறை​யிலும் உலகுக்கு வழிகாட்டும் நண்பராக, இந்தியா உருவெடுக்க வழிவகுத்​துள்ளன.

2024 நவம்பர் 25 முதல் 30 வரை டெல்​லி​யில், சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ - ICA) பொதுச் சபைக் கூட்​டத்​தை​யும் உலகளாவிய கூட்டுறவு மாநாட்​டை​யும் இந்தியா நடத்த உள்ளது. ஐசிஏ-​வின் 130 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை​யாக, இந்தியா அதன் அமைப்​பாளராக செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு மிக முக்​கி​யத்துவம் வாய்ந்​தது. ஏனெனில் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ம் ஆண்டை ஐ.நா. அறிவித்​துள்ள நிலை​யில் இது நடைபெறுகிறது. ஐசிஏ பொதுச் சபைக் கூட்​டத்​தை​யும் உலகளாவிய மாநாட்​டை​யும் இந்தியா நடத்துவது கூட்டுறவு இயக்​கத்​தில் நமது தேசத்​தின் தலைமைக்​குக் கிடைத்த உலகளாவிய அங்கீ​காரம் ஆகும்.

இந்த முக்​கி​யத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்தியா தனது கூட்டுறவுத் துறையை புத்​து​யிர் பெறச் செய்​வ​தில் ஆர்வமாக உள்ளதை காட்டு​கிறது. நலிவடைந்த கூட்டுறவு நிறு​வனங்​களுக்கு புத்​து​யிர் அளிக்​க​வும், அவற்றின் செயல்​பாடுகளை முறைப்​படுத்​த​வும், கூட்டுறவு சங்கங்​களிடையே வெளிப்​படைத்​தன்​மை​ போட்​டித் தன்மை​யை​ வளர்க்​க​வும் விரிவான நிர்​வாக, கொள்கை, சட்ட சீர்​திருத்​தங்கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி​யின் தாரக மந்திரமான ‘சககார் சே சம்ரிதி’ எனப்​படும் கூட்டுற​வின் மூலம் வளம் என்பது, நாட்​டின் கூட்டுறவு நிறு​வனங்களை தற்சார்​புடைய​தாக​வும் வலுவான​தாக​வும் மாற்றும் நோக்​கத்​தைக் கொண்​டுள்​ளது.

கூட்டுறவுக் கட்டமைப்பை விரிவுபடுத்து​வதன் மூலம், ஒரு புதிய பொருளாதார மாதிரி வடிவ​மைக்​கப்​பட்டு வருகிறது. இது 5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரத்தை அடைவதற்கான பிரதமரின் தொலைநோக்​குப் பார்​வைக்கு ஏற்ப அமைந்​துள்ளது. இந்த முன்​மா​திரி, இந்தியா​வின் வளர்ச்​சியை முன்னெடுத்​துச் செல்வது மட்டுமல்​லாமல், உலகெங்​கிலும் உள்ள பிற நாடு​களின் வளர்ச்​சிக்கு உத்வேகம் அளிக்​கும் கட்டமைப்​பாக​வும் செயல்​படும்.

இந்தியா​வின் கூட்டுறவுப் பாரம்​பரியம் தொன்று தொட்​ட​தாகும். இந்தப் பாரம்​பரி​யத்​தின் வேர்கள் நமது கலாச்​சார, பொருளாதார நடைமுறை​களில் பதிந்​துள்ளன. கவுடில்​யரின் அர்த்​தசாஸ்​திரத்​தில் உள்ள குறிப்பு​கள், கிராமங்​களில் பொது நலனுக்காக கோயில்​களை​யும் அணைகளை​யும் கட்டுவது போன்ற கூட்டு முயற்சிகளை எடுத்​துக்​காட்டு​கின்றன. மேற்​கத்திய சிந்தனை முறை​களில் பயிற்சி பெற்ற பல பொருளாதார வல்லுநர்கள் 21-ம் நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில் நவீன யுகத்​தில் கூட்டுறவு என்ற கருத்து வழக்​கொழிந்து வருகிறது என்ற கருத்தை முன்​வைக்கத் தொடங்​கினர். இருப்​பினும், 3 கோடி, 5 கோடி அல்லது 10 கோடி மக்கள்​தொகை கொண்ட நாடுகள் உருவாக்கிய பொருளாதார மாதிரிகள் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்​டிற்கு பொருத்​த​மானதாக இருக்​காது என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஒரு வளமான தேசத்தை உருவாக்க, பொருளாதார வளர்ச்​சி​யின் அனைத்து குறி​யீடு​களி​லும் உயர்வது அவசி​யம். அது மட்டுமல்​லாமல், 140 கோடி மக்களின் செழிப்பை உறுதி செய்​வதும், அனைத்து தனிநபர்​களுக்​கும் வேலை​வாய்ப்பு வழங்​கு​வதும், கண்ணி​யத்​துடன் வாழ்​வதற்கான உரிமையை உறுதி செய்​வதும் அவசி​யம். இது கூட்டுறவால் மட்டுமே சாத்​தி​ய​மாகும். இந்தக் கருத்தை நிரூபிக்க நமது வரலாற்றில் பல சான்​றுகள் உள்ளன.

உதாரண​மாக, அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி கடந்த நூற்​றாண்​டில் ரூ.100 கோடி லாபத்தை அடைந்​துள்ளது. அது மட்டுமல்​லாமல், ரூ.6,500 கோடிக்கு மேல் வைப்புத்​தொகை​யை​யும் இது கொண்​டுள்​ளது. கூட்டுறவு இயக்​கத்​தின் வெற்றிகரமான உதாரணமாக அமுல் திகழ்​கிறது. தற்போது, இதன் மூலம் 35 லட்சம் குடும்​பங்கள் வேலை​வாய்ப்​பை​யும், கவுரவமான வாழ்க்கை​யை​யும் பெற்று வருகின்றன. இந்தக் குடும்​பங்​களில் உள்ள பெண்கள் இதில் முக்​கியப் பங்காற்றி, முன்னணி​யில் இருந்து வழி நடத்தி வருகின்​றனர். இதன் விளைவாக இன்று அமுல் நிறு​வனத்​தின் ஆண்டு வர்த்​தகம் ரூ.80,000 கோடியை எட்டி​யுள்​ளது. இதில் முக்​கியமான அம்சம் என்னவென்​றால், இந்தப் பெண்கள் யாரும் தொடக்​கத்​தில் 100 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய​வில்லை.

பிரதமர் நரேந்திர மோடி​யின் தொலைநோக்​குத் தலைமை​யின் கீழ், இந்தியா​வில் கூட்டுறவு இயக்​கத்​திற்கு புத்​து​யிர் அளிக்​க​வும், வலுப்​படுத்​த​வும் 60-க்​கும் மேற்​பட்ட முயற்சிகளை அரசு அறிமுகப்​படுத்​தி​யுள்​ளது. பல ஆண்டு​களாக புறக்​கணிப்​பை​யும் நிர்வாக முறை​கேடு​களை​யும் எதிர்​கொண்ட பெரும்​பாலான தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்), நிதி ரீதியாக பலவீன​மாக​வும் செயலற்​ற​தாக​வும் மாறி​யுள்ளன. இதைச் சரி செய்ய அரசு, தொடக்க வேளாண் கடன் சங்கத்​தின் நோக்​கத்தை விரிவுபடுத்தி, அவற்றை பொருளாதார ரீதியாக வளமாக்கி​யுள்​ளது. புதிய துணை விதிகளை ஏற்றுக்​கொள்​வதன் மூலம், தொடக்க வேளாண் கடன் சங்கங்​கள், இப்போது பால், மீன்​வளம், தானிய சேமிப்பு, மக்கள் மருந்தக மையங்களை நடத்​துதல் உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட பல்வேறு நடவடிக்கை​களில் ஈடுபட முடி​யும். மூன்று புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்கள் நிறு​வப்​பட்​டதன் மூலம் கூட்டுறவுச் சூழல் அமைப்பு மேலும் மேம்​பட்​டுள்​ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறு​வனம் விவசா​யிகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்​தி​யுள்​ளது. அதே நேரத்​தில் தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் நிறு​வனம், இயற்கை வேளாண் பொருட்​களுக்கு சான்​றளிப்பு நடவடிக்கைகளை மேற்​கொள்​வதுடன், இயற்கை வேளாண் பொருட்​களுக்கான சந்தை வாய்ப்புகளை வழங்​கு​கிறது.

பாரதிய பீஜ் சககாரி சமிதி நிறு​வனம், விவசா​யிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்​துள்ளது. நிதி உதவி, வரி விலக்​குச் சலுகைகள், எத்த​னால் கலப்புத் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புத்​து​யிர் அளித்​துள்ளன. கூட்டுறவு வங்கிகளை வலுப்​படுத்த, கூட்டுறவு நிறு​வனங்​களின் நிதியை கூட்டுறவு வங்கி​களுக்கு திருப்பி விடு​வதற்கு கொள்கை முக்​கி​யத்துவம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நடைபெறும், ஐசிஏ பொதுச் சபைக் கூட்​ட​மும், உலகளாவிய கூட்டுறவு மாநாடும், ஐநா-​வின் நிலையான வளர்ச்சி இலக்​குகளை கூட்டுறவு இயக்​கத்​தின் மூலம் அடைவ​தில் இந்தியா​வின் குறிப்​பிடத்​தக்க முன்னேற்​றங்களை வெளிப்​படுத்து​வதற்கான தளமாக அமையும். வளர்ந்து வரும் சவால்களை எதிர்​கொள்ள​வும், புதிய வாய்ப்பு​களைப் பயன்​படுத்​த​வும் கூட்டுறவு​களுக்கு உதவும் ஒரு சிறந்த சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த மாநாட்​டின் முக்கிய நோக்​க​மாகும். உலகெங்​கிலும் உள்ள கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்து அனைவருக்​கும் சிறந்த, நிலையான எதிர்​காலத்தை உருவாக்கு​வதற்​குப் பங்களிக்க வேண்​டியது அவசி​யம்.

இந்த வரலாற்றுச் சிறப்பு​மிக்க நிகழ்வை நடத்த நாம் தயாராகி வரும் நிலை​யில், உலகெங்​கிலும் உள்ள கூட்டுறவு வல்லுநர்​கள், கொள்கை வகுப்​பாளர்கள் போன்ற​வர்​களுக்கு நான் ஒரு வெளிப்​படையான அழைப்பை விடுக்​கிறேன். உலகளாவிய கூட்டுறவு இயக்​கத்தை வலுப்​படுத்த கற்றல், பகிர்​தல், இணைந்து செயல்​படுதல் என்ற உணர்​வு​களுடன் நாம் செய​லாற்று​வோம். ‘கூட்டுற​வின் மூலம் வளம்’ என்ற இந்தியா​வின் ​கொள்கை, ஒரு தொலைநோக்​குப் பார்வை
மட்டுமல்ல. கூட்டுச் செழிப்பு, நீடித்த நிலைத்​தன்மை, அனை​வரை​யும் உள்​ளடக்கிய வளர்ச்சி ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் ​கொண்ட, பிர​காச​மான எ​திர்​காலத்​தை உருவாக்​குவதற்​கான சிறந்​த உறு​திமொழி​யாகும்​.

கட்டுரையாளர்: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்