ராகுல் சாதனையை முறியடித்த பிரியங்கா: 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில் வயநாட்டில் 7.06 லட்சம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். 2024-ல் 6.47 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். இப்போது வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வாக்கி எண்ணிக்கை நிறைவு பெற இன்னும் நேரம் இருக்கும் சூழலில் இதுவரை 6,22 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

ரே பரேலி தொகுதி எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் வயநாட்டிலும் போட்டியிட்டு 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் அமேதியிலும், முதல் முறையாக வயநாட்டிலும், போட்டியிட்ட போது அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் வெற்றி பெற்று தனது மக்களவை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இதனிடையே, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலைச் சந்தித்த வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. இதனைத் தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார்.

வயநாடு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் தனது முதல் தேர்தலில் பிரியங்கா காந்தி6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து சிபிஐ வேட்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பிரியங்கா காந்தியின் வெற்றிக்காக கடந்த ஒருமாதமாக அவரது சகோதரர் ராகுல் காந்தியும், தாயார் சோனியா காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி வயநாட்டினை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்று தனது சகோதரிக்கு அவர் சவால் விடுத்தார்.

அப்போது அவர், "கேரளாவைப் பற்றி மக்கள் சிந்திக்கும் போது அவர்களின் நினைவில் முதலில் வயநாடுதான் வர வேண்டும். அது வயநாடு மக்களுக்கும் அவர்களின் பொருளாதாரத்துக்கும் பயனளிக்கும் மற்றும் உலகுக்கு அதன் அழகை அறியச்செய்யும்" என்றார். மேலும், நான் எப்போதும் வயநாடு மக்களுடன், அம்மக்களுக்காக இருப்பேன். இந்த தொகுதிக்கு இரண்டு எம்.பி.க்கள் அவர்களில் ஒருவர் அதிகாரப்பூர்வமற்றவர்.” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்