மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களின் நிலை குறித்து தற்போது பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் கோப்ரி-பச்பாகாடி தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பாரமதி தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரும் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலி சாகோலி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இஸ்லாம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) மூத்த தலைவர் ஜெயந்த் பாடிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

சிவ சேனா (யுபிடி) சார்பில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே வோர்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இதேதொகுதியில் இவரை எதிர்த்து சிவ சேனா சார்பில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

சிவ சேனா(யுபிடி) சார்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கேதார் டிகே பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் வந்த்ரே கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜீஷான் சித்திக், மான்குர்ட் சிவாஜி நகரில் போட்டியிட்ட நவாப் மாலிக், பாரமதி தொகுதியில் போட்டியிட்ட யுகேந்திர பவார் ஆகியோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

கன்காவ்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிதேஷ் ராணா, புல்தானா தொகுதியில் சிவ சேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் கெய்க்வாட், சமாஜ்வாதி கட்சி சார்பில் மான்குர்ட் சிவாஜி நகரில் போட்டியிட்ட அபு அசிம் அஸ்மி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட்டில் பர்ஹெய்ட் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலை வகித்து வருகிறார். இதேபோல், செரய்கெல்லா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சம்பாய் சோரனும் முன்னிலை வகித்து வருகிறார். ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், காண்டி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். காட்சில்லா தொகுதியில் போட்டியிட்ட பாபுலால் மராண்டி முன்னிலை வகித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்