ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. அங்கு நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இண்டியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில், நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு ஒருவாரம் கழித்து நவம்பர் 20-ம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதன் வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்தது. என்றாலும், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிலைமை சீராகும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து நிதானம் காத்து வந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டரை மணிநேரத்தில் நிலைமையில் மாற்றும் ஏற்பட்டது. காலை 10.30 மணிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 51 தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை பெற்றது. என்டிஏ கூட்டணி 29 தொகுதிகளில் வெற்றி முகத்தில் இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 41 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இண்டியா கூட்டணி அந்த இலக்கை தாண்டி விட்டது.
பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கம்லியே ஹேம்ரோனை முந்தியுள்ளார். அவரைப் போலவே மற்ற இண்டியா கூட்டணி வேட்பாளர்களும் குறிப்பிடத்தகுந்த முன்னிலையில் உள்ளனர்.
» மகாராஷ்டிரா தேர்தல் | ‘ஏதோ பெரிய சதி இருக்கிறது’ - சஞ்சய் ராவத்
» மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மிளிராத சோரன் குடும்பம்: ஜார்க்கண்ட் தேர்தலில் ஜேஎம்எம் முன்னிலை வகித்தாலும் சோரனின் குடும்பம் இந்தத் தேர்தலில் சிறப்பாக செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் ஹேமந்த் சோரனின் குடும்பத்தில் இருந்து அவர் உட்பட, அவரது மனைவி கல்பனா சோரன், அவரது இளைய சகோதரர் பசாந்த் சோரன், அவரது அண்ணி சீதா சோரன் என நான்கு பேர் போட்டியிட்டனர். இதில் முந்தைய மூவரும் ஜேஎம்எம் சார்பில் போட்டியிட, ஹேமந்தின் அண்ணன் மனைவி சீதா சோரன் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர்களில் முதல்வர் ஹேமந்த் சோரனைத் தவிர மற்ற மூவரும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட பின்தங்கியே உள்ளனர்.
பிசுபிசுத்து போன பாஜகவின் ஊடுருவல் பிரச்சாரம்: ஜார்க்கண்ட்டில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இம்முறை பாஜக மாநிலத்தில் ஊடுருவல்கார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது என்றாலும், அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் களத்தில் பின்தங்குவதை காணமுடிகிறது.
ஜெகநாத்பூரில் பாஜக வேட்பாளர் கீதா கோரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேனாராம் சிங்கு-வை விட பின்தங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் முதலில் பின்தங்கி பின்பு முன்னிலை பெற்றார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தாலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜேஎம்எம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago