மகாராஷ்டிரா தேர்தல் | ‘ஏதோ பெரிய சதி இருக்கிறது’ - சஞ்சய் ராவத்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணி 57 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும், 95 தொகுதிகளில் போட்டியிட்ட சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், “இது மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்கள் (மகாயுதி) என்ன செய்தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ பெறாதது எப்படி? தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேலும் பேசுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பிரவின் தரேகர், “சஞ்சய் ராவத் தனது விமானத்தை தரையிறக்க வேண்டும். மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி இருக்கும்போது மகாராஷ்டிரா மேலும் முன்னேறும். பொதுமக்களின் முடிவுக்கு இதுவே காரணம். மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவார் என நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்