மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணியில் பாஜக, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சிகளும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகளும் போட்டியிட்டன.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையான ஆய்வுகள் மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சித் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 23) தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே 2 கூட்டணியில் உள்ள தலைவர்களும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் தங்களின் கட்சி இருப்பதாகவும், தங்களின் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்றும் கருத்துகளைக் கூறி வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், புனே பிரதான சாலையில், அடுத்த முதல்வர் அஜித் பவார் என்று மிகப்பெரிய பதாகையை வைத்தார். இது கூட்டணிக் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதால் அந்த பதாகை நீக்கப்பட்டது.
» மீண்டும் வெடித்த வன்முறை: மணிப்பூருக்கு 10,000 வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
» மகா கும்பமேளாவுக்கு 3,000 சிறப்பு ரயில்கள்: சென்னை, கன்னியாகுமரியில் இருந்தும் புறப்படுகின்றன
மகாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் தலைவர் அஜித் பவார் ஆகியோர் போட்டியில் உள்ளனர். யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கிறதோ அந்தக் கட்சியின் தலைவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதில் கூறும்போது, “மகாயுதியின் மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து கலந்துபேசி நல்ல முடிவை எடுப்போம்" என்றார்.
இந்நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலும் முதல்வர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நிலவி வருகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சியின் தலைவர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோல் கூறும்போது, "தற்போதைய நிலவரப்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும். எனவே, முதல்வர் பதவியை காங்கிரஸுக்கே வழங்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, “மகா விகாஸ் அகாடி கட்சிகள் பெரும்பான்மை பெற்ற பிறகு, அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து யார் முதல்வர் பதவியை ஏற்பது என்ற முடிவை எடுப்போம். மேலும், முதல்வர் வேட்பாளர் நானா படோல் என்று அவரிடம் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கூறியிருந்தால், அதனை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் அறிவிக்க வேண்டும்" என்றார்.
சிவசேனா தரப்பில் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தரப்பில் மூத்த தலைவர் ஜெய்ந்த் பாட்டீலும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago