புதுடெல்லி: இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இன்று (நவ.21) நடைபெற்ற 'இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடைந்து, பகைமைகள் கோட்பாடுகளாக மாறி, பருவநிலை நெருக்கடி மேலோங்கி மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடுகிறது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கைகளான இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் தழுவுவதில் இதற்கு விமோசனம் இருக்கலாம்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரே அரசியலமைப்பின் கீழ் பல அதிகாரபூர்வ மொழிகள், பல மதங்கள் மற்றும் பல்வேறு இனங்களுடன் அதன் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. சமாதான சகவாழ்வு என்பது காலங்காலமாக நமது தத்துவத்தில் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இறையாண்மை, நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, மோதல்களை விட பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சிந்தனையிலும் செயலிலும் எப்போதும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. பண்டிகைகள், உணவு வகைகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை இந்தியா வலிமையானதாக கருதுகிறது.
சுற்றுச்சூழலை வளர்க்கும் அதே வேளையில், உள்ளடக்கிய வளர்ச்சி, அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வு ஆகியவை இந்திய தத்துவத்தின் இதயமாக உள்ளன. காலங்காலமாக இந்தியாவின் முக்கிய மதிப்புகள் அதன் அடையாளத்தின் அடித்தளம்; இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள் மற்றும் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டவை. தற்போதைய காலங்களில் அவை பண்டைய ஞானம் மற்றும் நவீனத்தின் கலவையாகும்.
» ‘சட்டம் தனது கடமையைச் செய்யும்’ - அதானி மீதான அமெரிக்க புகார்கள் குறித்து பாஜக கருத்து
» மூத்த பத்திரிகையாளர் வி.டி.ராஜசேகர் மங்களூருவில் காலமானார்: ஸ்டாலின், சித்தராமையா இரங்கல்
இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம். மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில். இந்தியா தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வையும் தேடும் நாடு. சமீபத்தில், ஜி 20 தலைவராக, இந்தியா, அதன் முக்கிய மதிப்புகளால் தூண்டப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகளாவிய முன்னேற்றத்திலிருந்து மனிதனை மையமாகக் கொண்ட உலகளாவிய முன்னேற்றத்திற்கு ஒரு மாற்றத்தை ஆதரித்தது. பிரிவினையைத் தாண்டி ஒற்றுமையை வலியுறுத்தியது.
ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர ஜி20 உறுப்பினராக இணைத்தது ஒரு மைல்கல் சாதனை. ஜி20 தலைமையின் போது இந்தியா நடத்திய வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடுகள், சர்வதேச தெற்கு பிராந்தியத்தை சர்வதேச ரேடாரில் கொண்டு வந்தன. அமைதி காத்தல் மற்றும் பருவநிலை நடவடிக்கை முன்முயற்சிகள் மூலம் ஆக்கபூர்வமான உலகளாவிய சக்தியாக மாறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago