கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இது தொடர்பான விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் அவ்விருவர் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று அம்மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
» சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
» இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக குறையும்: இக்ரா நிறுவனம் கணிப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஹரிஹரன், “முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் வழக்கு தொடர்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197(1)ன் படி முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், முன் அனுமதி இன்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடக்கிறது” என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமலாக்கப் பிரிவின் வழக்கறிஞர், “ப.சிதம்பரத்தின் மனு ஏற்புடையதல்ல. விசாரணை மேற்கொள்வதற்கு முன் அனுமதி தேவையில்லை. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது அவரது அலுவலகப்பூர்வமான பணிக்கு எதிராக குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இதில் வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி தேவையில்லை"என்று வாதிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago