ரியோ டி ஜெனிரோ: நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதியாக உள்ளது என நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "புதுடெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம். பிரேசிலின் தலைமையின் கீழ், இந்த இலக்குகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
இது தொடர்பாக, நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாடுகள் மற்றும் முயற்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நாங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில், 12 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. 11.50 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
எங்கள் முயற்சிகள் முற்போக்கான மற்றும் சமநிலையான பாரம்பரிய இந்திய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பூமியைத் தாயாகவும், ஆறுகளை உயிர் கொடுப்பவைகளாகவும், மரங்களை கடவுளாகவும் கருதும் நம்பிக்கை முறையை நாங்கள் கொண்டுள்ளோம். இயற்கையை கவனித்துக்கொள்வது நமது தார்மீகமான அடிப்படை கடமை என்று நாங்கள் நம்புகிறோம். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதிகளை முன்கூட்டியே நிறைவேற்றிய முதல் ஜி -20 நாடு இந்தியா ஆகும்.
» அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா - உக்ரைன் போர்
» ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்
இப்போது நாம் அதிக லட்சிய இலக்குகளை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எட்ட எங்களுக்கு நாங்களே இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதில் 200 ஜிகாவாட் அளவை நாங்கள் ஏற்கனவே எட்டியுள்ளோம்.
பசுமை மாற்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம். உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மேற்கூரை திட்டத்திற்கு சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. நாங்கள் எங்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில்லை. மனிதகுலம் முழுவதின் நலன்களையும் நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். உலக அளவில் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை நாங்கள் தொடங்கினோம். உணவுக் கழிவுகள், கார்பன் தடத்தை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், பசியையும் அதிகரிக்கிறது. இந்த அக்கறையிலும் நாம் பணியாற்ற வேண்டும்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை நாங்கள் தொடங்கினோம். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு" என்ற முன்முயற்சியின் கீழ், எரிசக்தி இணைப்பில் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். இந்தியா ஒரு பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்தை அமைத்துள்ளது. மேலும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கியுள்ளது. முக்கியமான கனிமங்கள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நாங்கள் ஒரு சுழற்சி அணுகுமுறையில் கவனம் செலுத்தியுள்ளோம்.
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ், இந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 100 கோடி மரங்களை நாங்கள் நட்டிருக்கிறோம். பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இதன் கீழ், பேரிடருக்கு பிந்தைய மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளில் நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
உலகின் தெற்கில் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக வளரும் சிறிய தீவு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, சீரான மற்றும் பொருத்தமான எரிசக்தி கலவையின் தேவை மிகவும் முக்கியமானதாகும். எனவே, உலகின் தெற்கில் எரிசக்தி மாற்றத்திற்கான மலிவான மற்றும் உறுதியான பருவநிலை நிதி இன்னும் முக்கியமானதாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பம் மற்றும் நிதியை உரிய நேரத்தில் வழங்குவதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதும் அவசியம்.
இந்தியா தனது வெற்றிகரமான அனுபவங்களை அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக உலகின் தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த வகையில், 3-வது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய வளர்ச்சி ஒப்பந்தத்தையும் நாங்கள் அறிவித்தோம். இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago