ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 12.71 சதவீத வாக்குகள் அங்கு பதிவு.
இன்று அந்த மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
» மகாராஷ்டிர தேர்தலில் வாக்குப்பதிவு மந்தம்: காலை 9 மணி வரை 6.61% மட்டுமே பதிவு
» நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவைத் தொகுதிகள், வயநாடு, நான்டெட் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago