நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; 24-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் 24-ம் தேதி அனைத்​துக் கட்சிக் கூட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்ளது என்று மத்திய நாடாளு​மன்ற விவகாரத்​துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதிவில் கூறி​யுள்ள​தாவது: நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடரை முன்னிட்டு அனைத்​துக்கட்சி கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும். இவ்வாறு அவர் அதில் தெரி​வித்​துள்ளார்.

முன்ன​தாக, நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்​திருந்​தார். “மத்திய அரசின் பரிந்​துரை​யின் பேரில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 20, 2024 வரை நாடாளு​மன்​றத்​தின் இரு அவைகளை​யும் கூட்டு​வதற்கான முன்​மொழி​வுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்​துள்ளார்” என்று கிரண் ரிஜிஜு ஏற்கெனவே அறிவித்​திருந்​தார்.

மேலும், நவம்பர் 26-ம் தேதி அரசி​யலமைப்பு தினம் என்ப​தால், அரசி​யலமைப்பு சட்டம் ஏற்றுக்​கொள்​ளப்​பட்ட 75-வது ஆண்டு விழா, நாடாளு​மன்ற கட்டிடத்​தின் (சம்​விதன் சதன்) மைய மண்டபத்​தில் கொண்​டாடப்​படும் என்றும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார்.

இந்த குளிர்கால கூட்​டத்​தொடரின் போது, தற்போது நாடாளு​மன்ற கூட்டுக் குழு​வின் விசா​ரணை​யில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்​கொள்​ளும் என்றும், இந்த அமர்​வின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்​தல்’ மசோதாவை மத்திய அரசு அறிமுகப்​படுத்​தலாம் என்றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்​டம், வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலை​யில், பல்வேறு முக்கிய பிரச்​சினைகளை இந்த கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்ளதாக கூறப்​படு​கிறது. நாடாளு​மன்றம் கூடு​வதற்கு முன்​பாக, வரும் 23-ம் தேதி ஜார்க்​கண்ட், ம​காராஷ்டிர ​மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ​முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான விஷயங்களும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்