மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம்: 5,000 துணை ராணுவ வீரர்கள் விரைகின்றனர்; அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

By செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன் முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத் தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ் வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண் டும் அதிகரித்துள்ளதால், பாது காப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல், உள்துறை செயலர் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக் குநர் தபன்டிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு கூடுதல் படையினரை + அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்து மாறும் அமித் ஷா அறிவுறுத்தினார். மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர் கள்அடங்கியதுணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்பு படை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம் பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் மணிப்பூர் செல்கின்றனர்.

வன்முறைக்கு ஒருவர் பலி: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். "அவரை சுட்டது யார் என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞ ரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாது காப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது" என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர். பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவி அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல மாவட் டங் களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமை யிலான பாஜக அரசு, அமைதியைநிலை நாட்டவும், பிரச்சினை களுக்கு தீர்வு காணவும் தவறிவிட்டதாக கூறி தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 17-ம் தேதி வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

60 உறுப்பினர்களை கொண்ட மணிப் பூர் சட்டப்பேரவையில் என்பிபி கட் சிக்கு 7 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள னர். பாஜகவுக்கு பெரும்பான்மையாக 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதுதவிர, நாகா மக்கள் முன்னணியின் 5 எம்எல்ஏக் கள், ஐக்கியஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக் களும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரி வித்து வருகின்றனர். எனவே, என்பிபி த னது ஆதரவை விலக்கிக் கொண் டாலும் பாஜக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக விவாதிக்க ஆளும் தேசிய ஜனநாயக கூட் டணியின் எம்எல் ஏக்கள், அமைச் சர்கள் கூட்டத்துக்கு மாநில அரசு நேற்று அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்