ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் ஐக்கியம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்த நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.

டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வந்த அவர், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். பூங்கொத்து கொடுத்து அவர் வரவேற்கப்பட்டார். இதனையடுத்து, மனோகர் லால் கட்டார் அவருக்கு கட்சியின் உறுப்பினர் சீட்டை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், “டெல்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி அரசின் மூத்த அமைச்சராக இருந்தவர் பாஜகவில் இணைந்தது டெல்லி அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். பா.ஜ.,வில் சேரும் முடிவை எடுப்பதற்கு முன், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வின் பணியை நிச்சயம் அவர் பார்த்திருப்பார். அவரை கட்சிக்கு வரவேற்கிறேன்" என குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய கைலாஷ் கெலாட், "இந்த முடிவு யாரோ ஒருவரின் அழுத்தம் காரணமாக ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால், இன்றுவரை யாருடைய அழுத்தம் காரணமாகவும் நான் எதையும் செய்ததில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தந்த அழுத்தத்தில் இது நடந்தது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் அது தவறு.

டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தேன். ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் எதற்காக சேர்ந்தோமோ அந்த நோக்கங்கள் அனைத்தும் என் கண் முன்னே மதிப்பிழந்து கொண்டிருந்தன. இவை என் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் லட்சக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினரின் குரல் இருக்கிறது என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். எளிய மக்களுக்கு சேவை செய்ய நினைத்தவர்கள், இப்போது வசதிபடைத்தவர்களாக ஆகிவிட்டனர்" என குற்றம் சாட்டினார்.

முன்னதாக, கைலாஷ் கெலாட் தனது ராஜினாமா தொடர்பாக ஆத் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், "மக்களுக்கு சேவை செய்யும் உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டன. ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நாம் நிறைவேற்றவில்லை. குறிப்பாக யமுனையை தூய்மைப்படுத்து வோம் என்று கூறினோம். அதை செய்ய முடியவில்லை. உண்மையில் யமுனை நதி முன்பைவிட வும் இப்போதுதான் மிகவும் மோசமானதாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி பல சர்ச்சைகள் உள்ளன. இந்த கட்சி தற்போது சொந்த அரசியல் லாபத்துக்காக போராடி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியில் சங்கடமான. மோசமான பல விஷயங்கள் நடக்கின்றன. அதனால் கட்சியை இனிமேலும் நம்பலாமா என்ற சந்தேகம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கே பெரும்பாலான நேரத்தை ஆம் ஆத்மி அரசு செலவிடுகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி உண்மையான வளர்ச்சியை பெற முடியாது. அதனால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு இதை தவிர வேறு வழியில்லை. மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.” என்று கூறி இருந்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கைலாஷ் கெலாட், 2015 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர், அதற்கு முன்பாக உள்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, நிதி மற்றும் வருவாய் ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்