ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 26,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 5 ஆண்டு இடைவெளிக்குப்பின்பு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. 307 வீரர்கள், 45 கிளார்க் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 26,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராணுவத்தில் காஷ்மீர் இளைஞர்கள் சேர்வதை ஊக்குவிப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. சுமார் 4,000 பேர் உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர். வெளிப்படையான முறையில், காஷ்மீர் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago