மகாராஷ்டிர தேர்தலுக்கு மதச்சாயம்: பாஜக மீது சரத் பவார் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் புனே நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மகாயுதி அரசுக்கு எதிராக வாக்கு ஜிகாத் மேற்கொள்ளும்படி முஸ்லிம்களை இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கேட்டுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டார். மேலும் இதற்கு பதிலடியாக வாக்குகளுக்கான தர்மயுத்தத்தை நாம் தொடங்குவோம் என அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் நேற்று புனே நகரில் கூறுகையில் "துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அவரது பாஜக சகாக்களும் ‘வாக்கு ஜிஹாத்' என்ற பிரச்சாரத்தின் மூலம் வரவிருக்கும் தேர்தலுக்கு மதச் சாயம் பூச முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் இதற்கு முற்றிலும் எதிரானவர்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்