புதுடெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது செல்போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. வீடியோ காலில் பேசிய மர்மநபர், “தைவானில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது.
போதைபொருள் கடத்தல்வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்" என்று மிரட்டினார். மர்ம நபரின் மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று மன்றாடினார்.
எதிர்முனையில் பேசிய மர்ம நபர், முதியவரின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்க அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.10.3 கோடியை குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றக் கோரி உள்ளார். இதை நம்பிய முதியவர் தனது ரூ.10.3 கோடியை மர்ம நபர் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி உள்ளார்.
முதியவரின் மகன் துபாயில் வசிக்கிறார். அவரது மகள் சிங்கப்பூரில் உள்ளார். இதை அறிந்து கொண்ட மர்ம நபர், மகன், மகளிடம் இருந்து சில கோடிகளை வாங்கி தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புமாறு கோரி உள்ளார். இதையும் நம்பிய முதியவர் தனது மகன், மகளை தொலைபேசியில் அழைத்து பணம் கோரியுள்ளார்.
» திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் தங்க ஆரம் காணிக்கை
» பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு உடந்தையாக இருந்த பெங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
தந்தை ஏமாற்றப்பட்டிருந்தை அறிந்த மகன், உடனடியாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். உடனடியாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கம்போடியா நாட்டை சேர்ந்த மர்ம கும்பல், முதியவரை வீடியோகாலில் தொடர்பு கொண்டுபோதை பொருள் கடத்தல் வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளது.
இந்த வழக்கில் அவரது மகன்,மகளையும் சேர்க்கப்போவதாகவும் அச்சறுத்தி உள்ளனர். இதை நம்பிய முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10.3 கோடியை மர்ம கும்பலின் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளார். இதில் ரூ.60 லட்சத்தை மட்டுமே உடனடியாக மீட்க முடிந்தது. மீதமுள்ள பணத்தை மீட்க அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago