டெல்லியில் காற்று மாசு எதிரொலி: அரசு அலுவலக நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நகரில் காற்றின் தரம் மாசு அடைவதைத் தடுக்கும் வகையில், அரசு அலுவலகங்களுக்கான நேரத்தை மாற்றி டெல்லி முதல்வர் அதிஷி அறிவித்திருக்கிறார். இப்புதிய அறிவிப்பு காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதை நோக்கமாக கொண்டது. டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையான நிலையில் தொடர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்தப் புதிய அறிவிப்பின்படி, டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் இயங்கும். நகரின் காற்று மாசுக்கு முக்கிய காரணமான வாகனங்கள் உமிழும் புகையினைக் கட்டுப்படுத்துவதன் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) இன்று GRAP III நிலையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோலில் இயங்கும் BS-III (Bharat Stage-III) 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் BS-IV 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region-NCR) மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்தால் நிலை 4 அமல்படுத்தப்படலாம். அதன்படி, கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு கடுமையான தடை விதிக்கப்படும். சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். முக்கிய சாலைகளில் தினமும் தண்ணீர் தெளிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்