ஜமுய் (பிஹார்): பிரதமர் நரேந்திர மோடி பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில் இருந்து ரூ. 6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். மேலும், பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) எனும் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் கிரஹ பிரவேச நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
PM-JANMAN திட்டத்தின் கீழ் 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் (MMUs), தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA) திட்டத்தின் கீழ் 30 கூடுதல் நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார். 10 ஏகலவ்ய மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும், 300 வளர்ச்சிக் கேந்திராக்களையும் அவர் திறந்து வைத்தார்.
பழங்குடியினர் பகுதிகளில் 500 கிமீ புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர்-ஜன்மனின் கீழ் 25,000 புதிய வீடுகளுக்கும், DAJGUA-ன் கீழ் 1.16 லட்சம் வீடுகளுக்கும், பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதிகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
» ‘வாரத்துக்கு 6 நாட்கள் வேலை கருத்தை என் கல்லறை வரை கொண்டு செல்ல தயார்’ - நாராயண மூர்த்தி
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் சுதந்திரம் மற்றும் வரலாற்றில் பழங்குடி மக்களின் பங்களிப்பை யார் மறப்பார்கள்? பழங்குடியினப் பெண்ணான திரவுபதி முர்முவை இந்திய குடியரசுத் தலைவராக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிர்ஷ்டம். நிதிஷ் குமார் கூட அவரது வேட்புமனுவை முழுவதுமாக ஆமோதித்தார்.
பழங்குடியினர் நலம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை. நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம். நாட்டில் இரண்டு பழங்குடியினர் மத்திய பல்கலைக்கழகங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இதற்கு முன் ஒரே ஒரு பழங்குடி மத்திய பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது" என குறிப்பிட்டார்.
கடந்த மூன்று நாட்களில் பிஹாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பயணம் இதுவாகும். நவம்பர் 13 அன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்கும் அவர் தர்பங்காவுக்கு வந்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago