புதுடெல்லி: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்து பிரச்சினையால், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
7 பேருக்கு மரண தண்டனை: இந்தக் கொலை வழக்கில் சுப்பையாவின் உறவினரான அரசுப்பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
» பாஜக கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது: உ.பி. முதல்வர் யோகிக்கு மகா யுதியில் எதிர்ப்பு
» சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து விமர்சனம்: நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி சுப்பையா மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தவறான நடைமுறைக்கு வழி: இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திரஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தி சுப்பையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மயில்சாமி, ‘‘இந்த கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் பல்வேறு விவகாரங்களை முறையாக ஆராயாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்துள்ளது. இது முற்றிலும் தவறான நடைமுறைக்கு வழிவகுத்துள்ளது’’ என வாதிட்டார்.
இதேபோல தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, ஒரு வழக்கின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. நீதிபதிகள் இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் முடிவு எடுத்துள்ளனர்’’ என வாதிட்டார்.
4 வாரத்தில் பதில் தரவேண்டும்: அதையடுத்து நீதிபதிகள், ‘‘கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது ஏற்க முடியாதது. இதுபோன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago