ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் இடைத்தேர்தலின்போது மாவட்ட துணை ஆட்சியரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தியோலி - உனியாரா சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மாவட்ட துணை ஆட்சியர் அமித் சவுத்ரி ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா, வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றுள்ளார். தேர்தல் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சவுத்ரியின் கன்னத்தில் நரேஷ் மீனா அறைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நரேஷ் மீனாவை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இதைக் கண்டித்து மீனாவின் ஆதரவாளர்கள் சம்ரவதா கிராமத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட சுமார் 60 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago