ஓட்டுக்கு பணம் விநியோகம் | மும்பை உள்பட நாட்டின் பல நகரங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அகமதாபாத், மும்பை உள்பட நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கத் துறை விரிவான சோதனை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) நாட்டின் பல நகரங்களில் விரிவான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அகமதாபாத்தில் 13 இடங்களிள், சூரத்தில் 3 இடங்கள், மாலேகான் மற்றும் நாசிக்கில் தலா 2 இடங்கள், மும்பையில் 5 இடங்கள் என இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பான நிதி முறைகேடுகளுக்கான ஆதாரங்களைக் கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களிடம் ரூ. 125 கோடி வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விஷயத்தில் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகளை குறிவைத்து அமலாக்கத் துறை இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

“இந்த கணக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத பணத்தை மறைப்பது, கண்டுப்பிடிப்பதில் இருந்து தப்பித்துக்கொள்வது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபர்களின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையானது சட்டவிரோத பணப் புழக்கத்தைக் கண்டறிந்து, இந்த வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்திய அளவை வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று சோதனை நடவடிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல கணக்குகள் மூலம் நிதிகளை விநியோகிக்க திட்டம் திட்டமிடப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்