புதுடெல்லி: விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கும் பொறுப்பையும், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் சிஐஎஸ்எஃப் ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், "தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை மெய்ப்பிக்கும் வகையிலான உறுதியான நகர்வில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டாலியனுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உயரடுக்கு படையாக உயர்த்தப்படும் விதமாக விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் பொறுப்பையும், கமாண்டோக்களாக விஐபிகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பையும் இனி மகளிர் பட்டாலியன் ஏற்கும். இந்த முடிவு, நாட்டைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பில் அதிக எண்ணிக்கையிலான பெண்களின் விருப்பங்களை நிறைவேற்றும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்பு படையின் அதிகரித்து வரும் கடமைகளை மனதில் கொண்டு, நாட்டின் முதல் பெண்கள் மட்டுமே அடங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பெண்கள் பட்டாலியனுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. தற்போது 1.80 லட்சமாக இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் எண்ணிக்கையில் 7 சதவீதம் பெண்கள் உள்ளனர். இந்தியாவின் ஆயுதப் படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படை கடந்த 1969-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. இது முக்கியமான அரசு மற்றும் தொழில் துறை நிறுவனங்களை பாதுகாக்கும் பணியைச் செய்வது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago