சுகாதார மேம்பாட்டில் முழுமையான அணுகுமுறையுடன் அரசு செயல்படுகிறது: பிரமதர் மோடி

By செய்திப்பிரிவு

தர்பங்கா: நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். விழாவில், முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பிஹாரின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.

இது பிஹாரின் மிதிலா, கோசி, திருஹட் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களக்கும் பயனுள்ளதாக இருக்கும். நேபாளத்தில் இருந்து வரும் நோயாளிகளும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இது இங்கு பல வேலை வாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்கும் முன், பிஹார் சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் சுகாதாரத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மத்திய அரசு, நாட்டின் சுகாதாரம் தொடர்பாக முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது. முதலில், நோயைத் தடுப்பது, இரண்டாவது நோயை சரியாகக் கண்டறிவது, மூன்றாவது மக்களுக்கு இலவசமான, மலிவான சிகிச்சை கிடைக்கச் செய்வது மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வது, நான்காவது, சிறிய நகரங்களில் கூட சிறந்த சிகிச்சை வசதிகளை வழங்குவது மற்றும் நாட்டில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிப்பது, ஐந்தாவது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது என திட்டமிட்ட ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் நலன்களை காப்பதிலும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவேதான், நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கியா கோயில்களை நாடு முழுவதும் நாம் உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இல்லை என்றால், இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டத்தால் அவர்களின் வாழ்வில் இருந்த பெரும் கவலை நீங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் சுமார் ரூ.1.25 லட்சம் கோடியை சேமித்துள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைதான் இருந்தது. சிறந்த சிகிச்சைக்காக ஒவ்வொருவரும் டெல்லிக்கு வர வேண்டிய நிலை இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 4-5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், உரிய சிகிச்சை தொடங்கப்படவில்லை. எனது தலைமையிலான அரசு நாட்டின் அனைத்து மூலைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கி இருக்கிறது. இன்று நாட்டில் சுமார் ஒரு டஜன் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது அரசு மருத்துவக் கல்வியை இந்தி மற்றும் இந்திய மொழிகளில் கற்கவும் வாய்ப்புகளை வழங்கி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் மருத்தவர்களாக ஆக வேண்டும் என்பதே நமது இலக்கு" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்