செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, பின்டெக், சாப்ட்வேர், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. சுமார் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரி்த்துக் கொண்டுள்ளன.
ஏஐ தொழில்நுட்ப செயலாக்கத்தின் சர்வதேச சரசரி 26 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியா அதனை விஞ்சி 30 சதவீதத்தை எட்டிப்பிடித்துள்ளது. இருப்பினும், இந்தியவில் 74 சதவீத நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டால் ஏற்படும் உறுதியான மதிப்பு மாற்றத்தை இன்னும் முழுமையான அளவில் உணராமல் உள்ளன.
உலகளவில் 4 சதவீத நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிநவீன ஏஐ திறன்களை மேம்படுத்தி குறிப்பிடத்தக்க அளவில் தங்களது மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன. இவ்வாறு பிசிஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago