சீனியரை விமர்சித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி: யார் இந்த ‘கலெக்டர் ப்ரோ’?

By செய்திப்பிரிவு

கொச்சி: கேரளாவில் ‘கலெக்டர் ப்ரோ’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை ஆன்லைனில் கிண்டல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரள அரசின் விவசாயத் துறை சிறப்பு செயலராக இருப்பவர் என்.பிரசாந்த் ஐஏஎஸ். 2007 பேட்சை சேர்ந்த பிரசாந்த், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2015ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சமூக வலைதளங்களில் தன்னுடைய செயல்பாடுகளால் மிகவும் பிரபலமானார். இளைஞர்கள் பலரும் அவரை அன்போடும் உரிமையோடும் ‘கலெக்டர் ப்ரோ’ என்று அழைத்தனர்.

இவரை பேஸ்புக்கில் 3 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரம் பேரும் பின்தொடர்கின்றனர். இவர் பகிரும் ஆக்கப்பூர்வமான பதிவுகள் வரவேற்பை பெற்றன. அதில் ஒன்று மலபார் ஏரியை சுத்தம் செய்ய வருமாறு பொதுமக்களுக்கு இவர் அழைப்பு விடுத்தது. இவரது அழைப்பை ஏற்று பலரும் ஏரியை சுத்தம் செய்ய முன்வந்தனர். அவர்கள் அனைவருக்கும் இவர் பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.

ஆனால் அதே சமூக வலைதள பதிவுகள் காரணமாக தற்போது பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயதிலக்கை ‘மனநலம் குன்றியவர்’ என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டதே அவரது பணியிடைநீக்கத்துக்கு காரணம்.

பட்டியலின் மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட ‘உன்னதி’ திட்டத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனதாக வெளியான ஊடக செய்தியை தொடர்ந்து, தன் மீது வேண்டுமென்றே ஜெயதிலக் அவதூறு பரப்புவதாக பிரசாந்த் குற்றம்சாட்டினார். மேலும் தனக்கு கீழப்படியாத ஜூனியர்களின் வாழ்க்கையை ஜெயதிலக் நாசமாக்குவதாகவும் பிரசாந்த் விமர்சித்துள்ளார்.

ஒருபடி மேலே சென்று மற்றொரு பதிவில், ‘மாதம்பள்ளியின் உண்மையான மனநல நோயாளி’ என்று கிண்டல் செய்துள்ளார் பிரசாந்த். பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக அப்பதிவை நீக்கிவிட்டார். மேலும் தான் ஒரு விவசாயி என்றும், ஜெயதிலக் போன்ற களைகளை எடுக்க வந்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து பிரசாந்தை சஸ்பெண்ட் செய்து கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதலங்களில் ஆக்கப்பூர்வமான பதிவுகளால் ‘கலெக்டர் ப்ரோ’ என்ற பிரபலமான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதே சமூக வலைதளத்தில் மோசமான விமர்சனங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்