காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பட்டப்பகலில் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ராமகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ரகக்ஞா (22). பட்டதாரியான இவர், கரீம் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள ‘மீ சேவா’ அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களாக பணியாற்றி வந்தார். இவரை ராமகுண்டம் மார்க்கண்டேய நகரை சேர்ந்த வம்சிதர் (25) என்ற இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ரகக்ஞா ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வம்சிதர், ரகக்ஞாவிடம் தன்னை காதலிக்க முடியுமா ? இல்லையா ? என கூச்சல் போட்டுள்ளார். இதனால் வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என ரகக்ஞா கூறி, அவரை அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வம்சிதர், கத்தியால், ரகக்ஞாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர் வம்சிதரை அடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். உயிருக்கு போராடிய ரகக்ஞாவை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கரீம்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வம்சிதரையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago