ராமர் கோயில் பணி 3 மாதம் தாமதம்

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பணிகள் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் நடைபெற்றும் வரும் கட்டுமானப் பணிகள் வரும் 2025 ஜூன் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கோயிலின் பிரதானப் பகுதிகளின் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது பணிகள் மேலும் 3 மாதம் தாமதமாகிறது. அதன்படி பணிகள் வரும் ஜூன் மாதம் நிறைவடையும்.

சுமார் 200 தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. கோயிலின் முதல் மாடியின் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மோசமாகவும், மெல்லியதாகவும் உள்ளன. அவற்றை மாற்றிவிட்டு புதிய கற்கள் பதிக்கப்படும். அந்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கோயிலின் காம்பவுண்ட் சுவர்களில் பதிப்பதற்காக சுமார் 8.5 லட்சம் கியூப் அடி பரப்புள்ள பன்சி பஹார்பூர் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 6 சிறிய கோயில்களில் சிலை பிரதிஷ்டைக்காக ஜெய்ப்பூரில் இருந்து சிலைகள் வரவுள்ளன. அனைத்து சாமி சிலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரதிஷ்டை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்