ஊடக சுதந்திரம் என்பது ‘குற்றத்தை தீர்மானிக்கும்’ உரிமம் அல்ல: கேரள ஐகோர்ட் 

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித் துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்குகள் குறித்து செய்தி வெளியிடுவது குறித்து ஊடகங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று ரிட் மனுக்கள் மீது கேரள உயர் நீதிமன்ற அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. ‘ஊடக விசாரணைகள்’ குறித்த கவலைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து இந்த மூன்று மனுக்களும் கடந்த 2018-ம் ஆண்டு உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், கவுசர் எடப்பகத், முகமது நியாஸ் சி.பி, சி.எஸ்.சுதா மற்றும் சியாம் குமார் வி.கே. ஆகிய ஐந்து பேர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பில், "அடிப்படை உரிமைகளுக்கான சட்டப்பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை வழங்கும் போதிலும், சட்ட அதிகாரிகள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என்றோ அல்லது குற்றமற்றவர் என்றோ கூறுவதற்கு ஊடகங்களுக்கு உரிமை வழங்கவில்லை.

கட்டுப்பாடு இல்லாமல் செய்தி வெளியிடுவது என்பது தவறான எண்ணத்தை உருவாகுவதற்கும், நீதித் துறையின் மீது அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். ஊடகங்களின் விசாரணை நியாயமற்ற முறையில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கலாம் குற்றம்சாட்டப்பட்டவர் பற்றிய முன்தீர்மானத்தை ஏற்படுத்தலாம். இது கட்டப்பஞ்சாயத்து போன்றது.

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அதிலும் குறிப்பாக சட்டப்பிரிவு 21-ன் கீழ் தனிநபர்களுக்கான தனியுரிமை மற்றும் கண்ணியத்துக்கான உரிமைகளுடன் முரண்படுகையில் இது முக்கியமானது. உண்மைகளைச் சொல்வதற்கு ஊடகத்துக்கு உரிமைகள் உண்டு என்றபோதிலும், விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றி எழுதும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உறுதியான கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளனர்.

மேலும், “அவ்வாறு செய்யும்போது அது குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை மீறுவதாகும் என்பதோடு, பிற்காலத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஊடகங்கள் கட்டமைத்த விஷயங்கள் மாறுபட்டால் அது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும்” என்றும் கேரள உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்