புதுடெல்லி: தேவைப்படுபவர்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காத மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தனது கடைசி வேலை நாளில் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமையோடு சந்திரசூட்டின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், “என்னைத் தொடர்ந்து வழிநடத்துவது எது என்று கேட்டீர்கள். இந்த நீதிமன்றம்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்துகிறது. ஏனென்றால், எதையும் கற்றுக்கொள்ளாத, சமூகத்துக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்காத நாள் என்று ஒரு நாள் கூட இல்லை. தேவைப்படுபவர்களுக்கும், சந்திக்காதவர்களுக்கும், தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே சேவை செய்வதை விட மேலான உணர்வு எதுவும் இல்லை.
இளம் சட்ட மாணவராக நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும், சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்த நாற்காலியில் அமர்வதால் வந்த பொறுப்பை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். ஆனால் முடிவில், அது தனிநபரைப் பற்றியது அல்ல, அது நிறுவனம் மற்றும் காரணத்தைப் பற்றியது. நாங்கள் இங்கு நீதியை நிலைநாட்டுகிறோம்.
» “பழங்குடியின மக்களிடம் இருந்து நீர், வனம், நிலத்தைப் பறிக்க பாஜக முயற்சி” - ராகுல் காந்தி சாடல்
» “சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தைப் போன்றது மகாராஷ்டிர எதிர்க்கட்சி கூட்டணி” - பிரதமர் மோடி
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள சஞ்சய் கண்ணா கண்ணியமானவர், நீதி வழங்குவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர். நீதிமன்றத்தை சமமான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் வழிநடத்துவார் என்று வழக்கறிஞர் சமூகத்துக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் யாரையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என தெரிவித்தார்.
முன்னதாக, தலைமை நீதிபதி சந்திரசூட்டை வாழ்த்திப் பேசிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "தலைமை நீதிபதிக்கு எனது நல்வாழ்த்துகள். அவர் எனது பணியை எளிதாகவும் கடினமாகவும் ஆக்கியுள்ளார். அவர் செய்த புரட்சிகள் எனது பணியை எளிதாக்கி உள்ளன. அவர் அளவுக்கு எனது பயணம் இருக்காது என்பதால் கடினமாக ஆக்கி இருக்கிறார். அவரை நாங்கள் நிச்சயம் மிஸ் பண்ணுகிறோம்" என குறிப்பிட்டார்.
1959, நவம்பர் 11ம் தேதி பிறந்த சந்திரசூட், ஜூன் 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மார்ச் 29, 2000 அன்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 31, 2013 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். நீதிபதி சந்திரசூட், டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஏ பட்டமும், டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் எல்எல்பியும், ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் எல்எல்எம் மற்றும் ஜூரிடிகல் சயின்சஸ் (எஸ்ஜேடி) முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago