புதுடெல்லி: எல்லைகளற்றதாகவும், கண்ணுக்கு தெரியாததாகவும் மாறியுள்ள பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதிநவீன தொழில்நுட்பம் தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று (நவ.07) தொடங்கியது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், அமித் ஷா உரையாற்றினார். அவர் பேசியது: “எல்லைகளற்றதாகவும், கண்ணுக்கு தெரியாததாகவும் தற்போது பயங்கரவாதம் மாறியுள்ளது. வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராட மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அவசரத் தேவை உள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களும் பயங்கரவாதிகளின் சதியும் எல்லையற்ற, கண்ணுக்குத் தெரியாத வகையில் நமக்கு எதிராக உள்ளன. நாம் அதை துல்லியமாக சமாளிக்க வேண்டும் என்றால், நமது இளம் அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். வரும் நாட்களில் பயிற்சியின் முக்கிய அங்கமாக இதனை நாம் மாற்றுவோம்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான செயல்திறமிக்க அணுகுமுறையில் உள்துறை அமைச்சகம் அடுத்த கட்டத்தை எடுத்து வருகிறது. தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் உத்தியைக் உள்துறை அமைச்சகம் விரைவில் கொண்டு வரும். காவல் துறை மாநில அரசின் கீழ் வருகிறது. எனவே, மாநில காவல்துறைதான் இதில் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தகவல் கொடுப்பதில் இருந்து நடவடிக்கை எடுப்பது வரை மத்திய அரசின் அனைத்து ஏஜென்சிகளும் உங்களுக்கு ஆதரவளிக்கும்.
» சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்குப்பதிவு
» அரசு வேலைகளின் ஆட்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்
பயங்கரவாதத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை தற்போது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை திறம்பட எதிர்கொள்வதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்புடன், உள்நாட்டு பாதுகாப்பில் இந்தியா சிறந்த முன்னேற்றங்களை எட்டியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் 36,000 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எனது அஞ்சலி” என்று அமித் ஷா பேசினார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை வளர்க்கும் நோக்கில் இந்த 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வெளியீட்டில், மாநாட்டின் நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகளின் முழுமையான அணுகுமுறை மூலம் ஒத்துழைப்பை எளிதாக்குவது, எதிர்கால கொள்கை உருவாக்கத்திற்கான நுண்ணறிவுகளை உருவாக்குவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago