கற்ப கோயிலில் மூலவரான சிவனுக்கு பூஜை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேற்று காலை சன்னதியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் புகழ்பெற்ற சோமேஷ்வரர் கோயில் உள்ளது. பழங்கால கோயிலான இங்கு, நேற்று மூலவருக்கு இக்கோயிலின் பிரதான அர்ச்சகர் ராமாராவ் அபிஷேகம் செய்ய அதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட சக அர்ச்சகர் ஒருவர் ஓடி வந்து அவரை நிதானமாக எழுப்பி நிற்க வைத்த்தார். அடுத்த சில வினாடிகளிலேயே மீண்டும் அர்ச்சகர் ராமாராவிற்கு 2வது முறையாக கற்ப கிரகத்திலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.
அப்போது அவர் நிலை தடுமாறி மூலவரின் சிலை மீது விழுந்து தனது உயிரை துறக்கிறார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிவபெருமானின் தீவிர பக்தரான ராமாராவ், தான் தினமும் பூஜிக்கும் கோயில் கற்ப கிரகத்தில் உள்ள சோமேஸ்வரர் மீதே விழுந்து உயிரிழந்ததால், அவரை காண அக்கம் பக்கத்து கிராம மக்கள் திரளானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago