மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷா கடந்த 2002-ம் ஆண்டில் மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக வலம்வந்த அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாஜக சீட் வழங்கியது. இதையடுத்து, கட்கோபார் கிழக்கு பகுதி நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
பராக் ஷா2019-ல் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த பராக் ஷா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், மகாராஷ்டிரா வின் கட்கோபார் கிழக்கு தொகுதி யில் போட்டியிட பாஜக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த அவர் தன்னிடம் உள்ளசொத்து விவரங்களை தேர்தல்ஆணையத்திடம் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளார்.
அதில், பராக் ஷா தனக்கு ரூ.3,300 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். எம்எல்ஏ.வாக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பராக் ஷாவின் சொத்து மதிப்பு 575 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அசையும் சொத்துகள் ரூ.3,315.52 கோடியும், அசையா சொத்துகள் ரூ.67.53 கோடியும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 தேர்தலில் வேட்பு மனு தாக்கலின்போது தனது நிகர சொத்து மதிப்பு ரூ.550.62 கோடி மட்டுமே இருப்பதாக பராக் ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago