உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த புனேவைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் பல கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது. அதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் பாபா சித்திக் போல் சுட்டுக் கொல்லப்படுவார்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண் மூலம், மும்பை அருகேயுள்ள தானே பகுதியைச் சேர்ந்த பாத்திமா கான்(24) என்ற இளம்பெண் மிரட்டல் விடுத்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஐ.டி. படிப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்ற அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது தந்தை மர வியாபாரம் செய்து வருகிறார். பாத்திமா கான் சமீபகாலமாக மனநல பாதிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago